tamilnadu

ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் முக்கிய செய்திகள்

மக்களுக்கு  தண்ணீர்  அதிகளவில்   விநியோகம் செய்யவேண்டும்:  உயர்நீதிமன்றம்

சென்னை, மார்ச் 13- கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்களுக்கு குடிநீர்  விநியோகத்தை அதிகரிக்க வேண்  டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவமுத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் கடந்த 1987ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தின்படி சென்னை, காஞ்சி புரம்,  திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்க சென்னை குடி நீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தி டம் அனுமதி பெற வேண்டும். ஆனால்  இந்த மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட வாரியத்தின் அனுமதி பெறாமல் பலர் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வரு கின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் சுமார்  420 குடிநீர் ஆலைகள் சட்டவிரோத மாக நிலத்தடி நீர் திருட்டில் ஈடு பட்டு, அதனை விற்பனை செய்து  வருகின்றனர். எனவே சட்டவிரோத மாக அனுமதி இல்லாமல் செயல் படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் முறையான அனு மதி மற்றும் உரிமம் இல்லாததால் மூடப்பட்ட சட்டவிரோத குடிநீர் நிறு வனங்கள் ரூ. 50 ஆயிரம் முன் வைப்புத் தொகையுடன் அரசின் விதி களைப் பின்பற்றி உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் குடிநீர் நிறுவனங்களுக்கான உரிமம் பெற்றுள்ள நிறுவனங்களில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உறுதி  செய்வது, அவர்கள் எவ்வளவு நீரை  எடுத்துள்ளார்கள் என்பதற்கான அளவீட்டுக் கருவியைப் பொருத்து வது மற்றும் ஆலைகளுக்கு அனுமதி  வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்  கல் செய்யவும் இடைக்கால உத்தரவு  பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகி யோர் முன்பு வெள்ளியன்று விசார ணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிலத்தடி நீர் எடுக்க உரிமம் கோரி 1,054 விண்ணப்பங்கள் வரப்  பெற்றுள்ளது. அவற்றில் 690 விண் ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்க தகுதி  உடையதாக உள்ளன. உயர்நீதி மன்ற உத்தரவின்படி நிலத்தடி நீர் இருப்பு அளவை அறிந்து அதன் அடிப்படையில் உரிமம் வழங்க 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி கள், 2 வாரங்களில் உரிமம் கோரிய  விண்ணப்பங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண் டும். தவறினால் சம்பந்தப்பட்ட துறை  ஊழியர் முதல் அதிகாரிகள் வரை  ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த  உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நீதி பதிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து விரி வான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்களுக்கு  குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு அறிவு றுத்திய நீதிபதிகள், விசாரணையை வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 600 கனஅடியாக அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை, மார்ச் 13- கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு சராசரியாக வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நீர் வரத்து வினாடிக்கு 600 கனஅடியாக அதிகரித்தது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். அதன்படி கண்டலேறு அணையிலிருந்து கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ஒரே தவணையில் கண்டலேறு அணையில் பூண்டி ஏரிக்கு 6 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. கண்டலேறு அணையின் முழு கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். இதில் 5 டி.எம்.சி. கொள்ளளவு வரை தண்ணீரை வெளியேற்றலாம். இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் கடந்த 4ஆம் தேதி ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வலியுறுத்தினர். இதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதலாக 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடுவதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி உறுதியளித்தார். இதையடுத்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு சராசரியாக வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வியாழக்கிழமை காலை நீர் வரத்து வினாடிக்கு 600 கனஅடியாக அதிகரித்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இங்கு 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி நீர்மட்டம் 28.64 அடியாக பதிவானது. 1,445 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 313 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கன அடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது.

உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு

திருவள்ளூர், மார்ச் 13-  கண் நீர்,அழுத்த நோய் விழிப்புணர்வு, மார்ச் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை உலகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக  திருவள்ளூர் மாவட்டத்தில் கண்நீர் அழுத்த நோய்க்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  கண் நீர் அழுத்த நோய்  கண்ணில் உள்ள திரவ அழுத்தத்தால் ஏற்படும் ஒரு விதமான பார்வை குறைபாடு நோய். இதன் விளைவாக ஒருவருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டால் அது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் பார்வை இழப்பைத் தடுக்கலாம்.    பார்வை இழப்பின் 2ஆவது காரணமாக கண் நீர் அழுத்த நோய்  உள்ளது.  இந்தியாவில் குறைந்தது 12 மில்லியன் மக்கள் (ஒரு கோடியே இருபது லட்சம்) கண் நீர் அழுத்த நோய்)  பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதில் 10 விழுக்காடு (12 லட்சம்) மக்கள் இந்த நோயினால் பார்வை முழுவதுமாக பரிபோகும் நிலையில் உள்ளனர். இந்த நோய் எந்த வயதிலும் வரக்கூடிய நோயாகும். முக்கியமாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். மேலும், இது ஒரு பரம்பரை நோயாகும்.  கண் நீர் அழுத்த நோய்  முன் கூட்டியே கண்டறிவதன் மூலம் பார்வை இழப்பைத் தடுக்க இயலும். இதை முறையான கண் பரிசோதனை மூலம் ஆரம்ப கட்டத்தில் சரி செய்து ஒருவரின் பார்வையை காப்பாற்றி வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.   மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கண் பரிசோதனை மற்றும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே அனைவரும் இச்சேவையை பயன்படுத்தி பார்வை பறிபோவதில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு “கண்ணுக்குத் தெரியாத கண் நீர் அழுத்த நோயை முறியடிப்போம்”  எனும் மைய கருத்தைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.  பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, பஜார் வீதியில் நிறைவடைந்தது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் வாலிபர் கைது

தேனி, மார்ச் 13-  ஆபாச படங்கள் காட்டி பள்ளிச்சிறுமிக்கு பாலியல் தொல்லை  அளித்த வாலிபரை ஆண்டிபட்டி காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் .  ஆண்டிப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரம் கிராமத்தை  சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் பவுன்ராஜ் (32). கூலித்தொழிலாளி. இவர்  7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தனது செல்போனில் இருந்த ஆபாசப் படங்களைக் காட்டி பள்ளிக்கு செல்லும் போது பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பள்ளிமாணவியிடம்  பாலியல் தொந்தரவு செய்த பவுன்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

;