tamilnadu

img

கடலூர் மற்றும் திருவள்ளூர் முக்கிய செய்திகள்

போதைப்பொருள் நகரமாக மாறுகிறதா கடலூர்

கடலூர், ஆக. 14- கடலூரில் தடைசெய்யப்பட்ட கோடிக்கனக்கான ரூபாய் மதிப்புள்ள  போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலூர் திருவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.என்.பேட்டையில் மகேஸ்வரி கந்தசாமி என்பவருடைய வீட்டில் கோடிக்கனக்கான மதிப்புள்ள தடை செய்யப்பட்டுள்ள பான்பராக், குட்கா போன்ற போதை  பொருட்கள் இருப்பதாக கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டின் பூட்டை உடைத்து காவல் துறையினர்  சோதனை செய்ததில், வீடு முழுவதும் மூட்டைகளிலும், அட்டைப் பெட்டிகளி லும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் 7 வகையான எட்டு டன் போதைப்  பொருகளை கைப்பற்றி, பதுக்கி வைத்த குற்றவாளிகளை தேடி வரு கின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ் கூறு கையில், இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை செய்யப்படுகிறது.  கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு பல கோடி ரூபாய்  இருக்கும் என்றார். இந்த வகையான பொருட்களை கடைகளில் விற்ப தற்கு அரசு தடை செய்துள்ளது. அவ்வப்பொழுது உணவு பாதுகாப்புத்  துறையினர் சோதனை செய்து பறிமுதல் செய்கிறார்கள். ஆனாலும்  கடைகளில் இதுபோன்ற போதைப் பொருட்கள் எவ்வித தடையுமின்றி  விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இதே திருப்பாதிரிப்புலியூர் பகுதி யில் 6 பேரை கைது செய்து, 50 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது. கடலூர் நகரம் போதைப் பொருள் நகரமாக மாறி வருகிறதா என பொது மக்கள் அச்சத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோல் காவல்  துறையினருக்கு தெரியாமல் இவ்வளவு மதிப்புள்ள தடை செய்யப்பட்ட  போதைப் பொருட்கள் வீடுகளில் அடைத்து வைப்பது சாத்தியமில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

போர்டோ பர்னிச்சர் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

திருவள்ளூர், ஆக. 14 - திருவள்ளூரில் உள்ள போர்டே பர்னிச்சர் தனியார் நிறுவன தொழிலா ளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காக்களூர் தொழிற்பேட்டையில் போர்டே பர்னிச்சர் இந்தியா என்ற  தனியார் நிறுவனம் ஊரடங்கு காரணமாக இயங்கவில்லை. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தில், தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்க  இந்தியன் பர்னிச்சர் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்க மறுத்த நிர்வாகம் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.சுரேஷ், துணைத் தலைவர் ஆர்.நாராயணன் உட்பட 16 பேரை பணி நீக்கம் செய்தது. சென்னை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு பதிலாக நிர்வாகம் திசை திருப்பும் வகையில் செயல்படுகிறது. இதனை கண்டித்து தொழிற்சாலை முன்பு  தொழிலாளர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டவிரோத பணிநீக்கத்தை ரத்து செய்யகோரி மாவட்ட ஆட்சியரிடர் பலமுறை மனு  கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்த நிலையில் வெள்ளியன்று (ஆக.14) முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சங்க செயலாளர் ஏ.சுரேஷ்,  துணைத் தலைவர்கள் ஆர்.நாராயணன், பொருளாளர் கணபதி, சிஐடியு  மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

சோதனை அடிப்படையில் புதிய சிக்னல் அறிமுகம்

சென்னை, ஆக. 14 - மெரினா கடற்கரை காந்தி சிலை மணிக்கூண்டில் நவீன சிக்னல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது உள்ள சிக்னல்களில் எல்இடி பல்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை சிறிய அளவில் இருக்கின்றன. இதனையடுத்து சாலை களில் எல்இடி விளக்குகளை பதிந்து சிக்னல் விளக்கு களுக்கு ஏற்றவாறு ஒளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அது வாகன ஓட்டிகளை கவரவில்லை. இந்நிலையில், காந்தி சிலை மணிக்கூண்டு  சந்திப்பில் புதிய சிக்னல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன்படி சிவப்பு, ஆரஞ்ச், பச்சை என  வண்ணம் மாறும்போது, ஒரு வட்டத்திற்குள் மட்டும் விளக்குகள் எரியாமல், அந்த சிக்னல் கம்பம் முழுவ தும் ஒளிரும் வகையில் புதிய சிக்னல் அமைக்கப் பட்டுள்ளது. தூரத்திலிருந்து பார்க்கும் போது கூட என்ன சிக்னல்கள் விழுந்திருக்கிறது என்பதை மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இது அமைக்கப்  பட்டுள்ளது. மேலும் பச்சை நிற சிக்னல் விழுந்தால்  கோ என்றும், ஆரஞ்சு நிற சிக்னல் விழுந்தால் லிசன்  என்றும், சிவப்பு நிற சிக்னல் விழுந்தால் ஸ்டாப் என்று  அறிவிப்பு பலகை ஒளிரும்.