tamilnadu

img

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துக அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோரிக்கை

அத்தியாவசியப் பொருட்களின்  விலை உயர்வை கட்டுப்படுத்துக அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை, ஜூலை 27- அமைப்புசாரா தொழிலாளர்களின் பொது தொழிலாளர் சங்கத்தின் வட சென்னை மாவட்ட 20ஆவது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 27) நடைபெற்றது. தலைவர் ஆர்.மணிமேகலை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.லட்சுமி சங்கக் கொடியை ஏற்றினார். துணைச் செயலாளர் ஆர்.அசோக் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மா.பூபாலன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் ஆர்.லோக நாதன் வேலை அறிக்கை யையும், பொரு ளாளர் எம்.ஜாகிர் வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் பி.லூர்துசாமி வாழ்த்திப் பேசி னார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் டி.வெங்கட் வரவேற்றார். பகுதி தலைவர் எம்.ஜாவித் பாஷா நன்றி கூறினார். தீர்மானங்கள் பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், அனைவருக்கும் மாத ஓய்வூதியம் 3,000 ரூபாய் வழங்க வேண்டும், வாரிய பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும், நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரிசி மீது போடப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்ய வேண்டும், இ பஸ்களை தனியாரிடம் வழங்கி இளை ஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மாதா மாதம் மின் கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக ஆர்.மணிமேகலை, செய லாளராக  எம்.ஜாகிர், பொருளாளராக ஏ.பழனி உள்ளிட்டு 9 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.