tamilnadu

உளுந்தூர் பேட்டை பாலியல் வணிகக் குற்றம் ‘சிறப்புக் குழு அமைத்து முழு விசாரணை நடத்த வேண்டும்’

சென்னை, செப். 1 - உளுந்தூர்பேட்டையில் பள்ளிச் சிறுமிகளை பாலியல் வணிகத்தில் ஈடு படுத்திய அனைத்து குற்றவாளிகள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு  பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது

இதுதொடர்பாக சங்கத்தின் மாநி லத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையில் கடந்த 18ஆம் தேதி பாலி யல் வணிகத்தில் ஈடுபட்டதாக கூறி 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 17 வயது சிறுமி மற்றும் 19  வயது இளம் பெண்ணையும் மீட்டுள்ள னர். பள்ளி சிறுமிகளை பாலியல் வணி கத்தில் ஈடுபடுத்தியது பொது மக்களி டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டையில் கல்பனா என்பவர் பல ஆண்டுகளாக பாலியல் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார். அர சியல்வாதிகள், வழக்கறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வி நிலையங்கள் முத லாளிகள், நகைக்கடை வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு பள்ளி  சிறுமிகளின் புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்புவது, அதற்கு பிறகு ஜிபே, போன்பே மூலம்  பணம் பெற்றுக் கொண்டு பள்ளி சிறுமி களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்புவதை தொழிலாக நடத்தி வருகிறார். இவர் பல மாவட்டங்களில் வாட்ஸ்அப் குரூப் மூலம் தொடர்புகள் வைத்து இருக்கிறார். 

உடனே ஜாமீன்  வழங்கியது ஏன்?

உளுந்தூர்பேட்டை காவல்துறை யால் 18ஆம் தேதி  கைது செய்யப் பட்டவர்கள் 22ஆம் தேதி ஜாமீன் பெற்று வெளியில் வந்துவிட்டனர். இது காவல்துறை விசாரணை மீது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. 17வயது சிறுமியை வைத்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது ஏன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை. 

கல்பனா வீட்டில் மீட்கப்பட்ட 17  வயது சிறுமி செங்கல்பட்டு மாவட்டத் தில் உள்ள பழங்குடி சமூகத்தை சார்ந்த வர் என்று கூறப்படுகிறது. அப்படி என் றால் ஏன் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வில்லை?

இந்த குற்றசெயலுக்கு உறுதுணை யாக உளுந்தூர்பேட்டை காவல்துறை டிஎஸ்பி இருந்திருக்கிறார் என்றும் அதனால்தான் அவர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படு கிறது. அப்படி என்றால் அவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடைகாண வேண்டி யுள்ளது. 

ஆகையால் குற்றவாளிகள் அனை வர் மீதும் போக்சோ மற்றும் எஸ்சி/  எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். விழுப்புரம், கடலூர், கள்ளக் குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுக்கு இந்த குற்றச்செயலில் தொடர்பு இருப்பதால் தமிழ்நாடு அரசு  ஒரு சிறப்புக் குழு அமைத்து விசார ணை நடத்த வேண்டும்.

பள்ளி சிறுமிகளை எப்படி இந்த  பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்தி னார்கள் என்று முழுமையாக விசா ரணை நடத்தி இனி இதுபோன்ற சம்ப வங்கள் நடக்காத வகையில் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

கல்பனா செல்போனில் பணம் அனுப்பியவர்கள் அனைவரையும் விசாரணை நடத்தி, அவர்கள் பாலியல் நோக்கத்திற்காக பணம் அனுப்பியிருந்தால் அவர்கள் மீதும் போக்சோ, எஸ்சி/ எஸ்டி வன்கொடு மை தடுப்புச் சட்டம், ஐ.டி.பி சட்டம் 1956 பிரிவு 05 யின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.