tamilnadu

கோவில் அருகே தனிநபர் துப்பாக்கிச்சூடு இருவர் உயிரிழப்பு

பீகார் மாநிலம் லக்கிசராய் அருகே  பிரசித்திபெற்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில் தரிசனம் முடிந்த  பின்பு மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த  ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த ஒரு வர், மக்கள் கூட்டத்தை நோக்கி சர மாரியாக துப்பாக்கியால் சுட்டார். 

திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் மக்கள் அலறி அடித்து ஓடி னர். இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயம டைந்தனர். சகோதரர்கள் இருவர் சம் பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காய மடைந்தவர்களில் 2 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள். 

அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் காய மடைந்த 4 பேரையும் மீட்டு அருகி லுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்  காக அனுமதித்தனர். 4 பேரில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்  கிச்சூடு நடத்தியவரை பிடிக்க லக்கி சராய் பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.