தோழர் அச்சுதானந்தன் மறைவுக்கு குடியாத்தம் நகரில் அஞ்சலி
குடியாத்தம்,ஜூலை 22- தோழர். வி. எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு குடியாத்தம் நகரம் குடியாத்தம் தாலுக்கா மற்றும் பேர்ணாம்பட் கமிட்டிகள் கட்சி அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் பேர்ணாம்பட் தாலுக்கா செயலாளர் சி.சரவணன் தலைமையில் நடை பெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமி நாதன், செ.ஏகலைவன், குடியாத்தம் தாலுக்கா செயலாளர் எஸ்.சிலம்பரசன். மூத்த வழக்கறிஞர் சு.சம்பத்குமார் ஆகியோர் இரங்கல் உரையாற்றினார். இதில் கமிட்டி உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள்மற்றும் கட்சி தோழர் கள் கலந்து கொண்டனர்.