போனஸ் வழங்கக் கோரி டிஆர்இயு ஆர்ப்பாட்டம்
போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து டி.ஆர்.இ.யு சார்பில் செவ்வாய்கிழமை (செப்டம்பர் 9) டி.வி. சீனிவாசன் தலைமையில் அரக்கோணம் வர்க்ஷாப் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஏ.பி.எம். சீனிவாசன், டி.ஆர்.இ.யு மத்திய சங்க உதவித் தலைவர் பேபிசகிலா, சுதான்சு குமார் திவேதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர். பிரபு, மனு, சத்யா, அன்ஸ்ராஜ், ராமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
