tamilnadu

img

மதுரையின் பொக்கிஷம் மறைந்தது 

ஓவியர் மனோகர் தேவதாஸ் இன்று காலை இயற்கை எய்தினார்

தமிழ்நாட்டில், மதுரையில் 1936 ம் ஆண்டு பிறந்தார் மனோகர் தேவதாஸ். ஒவியத்தில் ஆர்வம் உள்ள இவர் பாரம்பரியமிக்க, கலைநயமிக்க புராதான மதுரை கோவில், சென்னை பகுதியில் உள்ள புராதான கட்டங்களை கருப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்களாக வரைந்து உள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, 1960-ல் இவரது கண்களின் விழித்திரை ரெடினிடிஸ் பிக்மென்டோசா என்ற குணப்படுத்த முடியாத நோயால் தாக்கப்பட்டது. சிறிது சிறிதாக பார்வை குறைந்து, முடிவில் முற்றிலும் பார்வையை இழந்தார். இந்நிலையில் தொடர்ந்து அவர் ஓவியங்களில் தான் பார்த்த மதுரையினை கோட்டோவியங்களாக வரைந்து வந்தார். 

இவருக்கு 83 வயதில் கடந்த 2020 ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சென்னை சாந்தோம் பாபனாசம் சிவன் சாலை இல்லத்தில் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது  குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது முகநூலில் கூறியிருப்பதாவது, 

வாழ்க்கை கண்ணொளியை பறித்து இருளில் தள்ளிய பொழுதும் தனது ஓவியத்தின் மூலம் புது உலகை படைத்துக்காட்டி தன்னம்பிக்கையின் ஒளியாய் சுடர்விட்ட மகாகலைஞன் மனோகர் தேவதாஸ் காலமானார்.

மதுரையின் பொக்கிஷம் மறைந்தது.

கண்ணீர் சிந்துவது உங்களுக்கு பிடிக்காது.

ஆனால் இந்த வரியை எழுதும் பொழுது வழிந்தோடும் கண்ணீரை அடக்க முடியவில்லை.

மன்னியுங்கள் மனோ.

ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

;