கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி
தருமபுரி, ஆக.22- தருமபுரி மாவட்டம், குண்டலபட்டியிலுள்ள கால் நடை மருத்துவ பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அகில இந்திய ஒருங்கி ணைந்த கோழி இனப்பெ ருக்க ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், பெண் விவசாயிகளுக்கு கோழி வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல் லூரி முதல்வர் திருவேங்க டன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் முரளி, செந்தமிழ்பாண்டியன், ராஜேந்திரகுமார், கண்ண தாசன் உள்ளிட்டோர் விவ சாயிகளுக்கு பயிற்சியளித் தனர்.
சம்பளப் பாக்கி தராததால் தொழிலாளி தற்கொலை சாதிய ரீதியாக அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு
ஈரோடு, ஆக.22- பெருந்துறை அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்த தொழி லாளி, சேர வேண்டிய சம்பளப் பாக் கியைக் கொடுக்காததாலும், சாதிய ரீதியாக அவமானப்படுத்தப்பட்டதா லும் மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. பெருந்துறை, பெரிய மடத்துப்பா ளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன் (35). இவர் பட்டியலினத் தைச் சேர்ந்தவர். கடந்த ஓராண்டாக, தோட்டாணி சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்தார். கடும் வேலைப் பளு காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்குச் செல்ல இயலாமல் போனது. அவருக் குச் சேர வேண்டிய ஒரு மாத சம்பளம் ரூ.20,000 நிலுவையில் இருந்தது. இந் தத் தொகையைக் கேட்டு அவர் நிறுவ னத்தினரை அணுகியபோது, அவரை நிறுவனத்திற்குள் அனுமதிக்காமல் அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படு கிறது. மூன்று மாதங்கள் ஆகியும் சம்ப ளம் வழங்கப்படவில்லை. மேலும், பாலசுப்பிரமணியன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்திருந்த நிறு வன உரிமையாளர், அவரை சாதிய ரீதி யாக அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பளம் கிடைக்கா ததால் பாலசுப்பிரமணியன் குடும்பச் செலவுகளுக்குக்கூடப் பணமில்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டார். “குழந் தைக்கு பால் வாங்கக்கூடப் பணம் இல்லை” என்ற மன உளைச்சலும், அவ மானமும் அவரைத் தாங்க முடியாத அளவுக்குச் சூழ்ந்தன. இதனால் விரக் தியடைந்த அவர், வியாழனன்று மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன், நிறு வன உரிமையாளர்தான் தனது இறப்புக் குக் காரணம் என்று வீடியோ பதிவு செய்து வைத்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்த குடும்பத்தினர் அவரை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்து வர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாகத் தெரிவித்தனர். பாலசுப்பிரமணி யனுக்கு யோகேஸ்வரி (34) என்ற மனை வியும், கீர்த்தனா ஸ்ரீ (7) மற்றும் 11 மாதக் குழந்தையான மகிழ்மித்ரா ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, பால சுப்பிரமணியனின் மனைவி யோகேஸ் வரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தார். அதில், தனது கணவரின் இறப் பிற்கு காரணமானவர்கள் மீது வன்கொ டுமை தடுப்புச் சட்டம் (PoA SC/ST), தற் கொலைக்குத் தூண்டிய பிரிவுகள் மற்றும் கொலை செய்ததற்கான பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள் ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள் ளார். காவல்துறையினர் யோகேஸ்வரி யின் புகாரைப் பெற்று, உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ள னர். இச்சம்பவம் குறித்து அறிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர். அர்ஜுனன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டத் தலைவர் பி.பி. பழனி சாமி, பொருளாளர் மா. அண்ணாதுரை, என். பாலசுப்பிரமணியன், வி.ஏ. விஸ்வநாதன் ஆகியோர் பாலசுப்பிரம ணியன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இச்சம் பவத்தில் நியாயம் கிடைக்கும் வரை உடன் நிற்பதாக அவர்களுக்கு நம் பிக்கை அளித்தனர்.