tamilnadu

கூடுவாஞ்சேரி - பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம், ஜன.20- பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த வாரம் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்கள் ஊருக்கு செல்வதற்காக  சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து  சனிக்கிழமை முதல் ஊருக்கு சென்றவர்கள் சென்னையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருக் கிறார்கள். இதனால் ஞாயிறன்று மாலை முதல் அதிக அளவு வாகனங்கள் சென்னையை நோக்கி வந்ததால் சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டு இருந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து வாகனங்கள் சென்றன. இதனால் சுங்கச்சாவடிகளில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. திங்களன்று (ஜன.20) அதிகாலை வண்டலூர், பெருங்களத்தூர் பகுதியில் அதிக அளவு வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பேருந்துகள் சாலை யில் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. இதனால் கூடுவாஞ்சேரியில் இருந்து பெருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.  இந்த போக்குவரத்து நெரிசல் அதிகாலை தொடங்கி காலை 10 மணி வரை நீடித்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களும் கடும் அவதிப்பட்டனர். பெருங்களத்தூர் வந்து இறங்கிய பயணிகள் சென்னை நோக்கிச் செல்வ தற்கு மாநகர பேருந்து வசதி குறைவாக இருந்ததால் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் முழுவதும் கூட்டம் அதிகாம இருந்தது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இலவசமாக செல்ல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் அறிவுறுத்தினார். இதையடுத்து தென் மாவட்ட வாகனங்கள் அனைத்தும் இலவசமாக சுங்கச்சாவடிகளை கடந்து சென்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

;