பாடி, கொரட்டூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய யூ-டர்ன் சாலைகள்
சென்னை, செப்.16- பாடி, கொரட்டூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய யூ-டர்ன் சாலைகள் அமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் சென்னையில் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் உள்வட்ட சாலை பயன்பாட்டில் உள்ளது. இது வடக்கில் மாநில நெடுஞ்சாலை 104இல் மணலியில் தொடங்கி தெற்கில் மாநில நெடுஞ்சாலை 49ஏ திருவான்மியூரில் சென்று முடி வடைகிறது. இடையில் என்.எச். 5 மாதவரம், என்.எச். 205 பாடி ஜங்ஷன், எஸ்.எச். 112 திருமங்கலம், என்.எச். 4 கோயம்பேடு ஜங்ஷன், எஸ்.எச். 113 வடபழனி, என்.எச். 32 கத்திப்பாரா ஜங்ஷன் ஆகிய முக்கியமான ஜங்ஷன்கள் வழியாக பயணிக்கிறது. இந்நிலையில் சென்னை உள்வட்டச் சாலையில் பாடி மற்றும் கொரட்டூர் பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஜவஹர்லால் நேரு சாலையில் கொரட்டூர் மற்றும் வில்லிவாக்கம் ரயில் நிலையங்கள் அருகில் யூ-டர்ன் சாலைகள் அமைக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளி யிடப்பட்டது கவனிக்கத்தக்கது. ஏற்கனவே இப்பகுதிகளில் உள்ள மேம்பாலத்திற்கு கீழாக யூ-டர்ன் சாலைகள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பாடி, வில்லிவாக்கம், கொளத்தூர், தாதன் குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறுவர். இவர்கள் உள்வட்டச் சாலையின் வலதுபுறம் பயணித்து கொரட்டூர், ரெட் ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும். குறிப்பாக நெருக்கடியான கொரட்டூர் வடக்கு ஜங்ஷனிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் கொரட்டூர் வடக்கு பகுதியில் உள்ள வீல்ஸ் இந்தியா, லூகாஸ் டிவிஎஸ், சுந்தரம் கிளேடன் ஆகிய தொழில் நிறுவனங்களுக்கு செல்வோரும் போக்குவரத்து நெரிச லில் சிக்காமல் விரைவாக பயணிக்க முடியும். இதற்காக பாடி பகுதியில் இடது புறமாக 374 மீட்டர் சர்வீஸ் சாலை அமைக்கப்படுகிறது. வலதுபுறமாக 424 மீட்டர் சர்வீஸ் சாலை அமை கிறது. இதில் 75 மீட்டர் பகுதியானது ரயில் பாதைக்கு கீழே செல்வது கவனிக்கத்தக்கது. ரெட்ஹில்ஸ் பகுதியில் இடதுபுறமாக 364 மீட்டர் தூரமும், வலதுபுறமாக 354 மீட்டர் தூரமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படுகிறது. மேலும் 75 மீட்டர் தூர சுரங்க வழித்தடமாக இருக்கும். இதன் உயரம் 5.5 மீட்டருக்கு மேல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடி, கொரட்டூர் பகுதியில் உள்வட்டச் சாலையில் புதிய யூ-டர்ன் சர்வீஸ் சாலை அமைப்பதற்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி 14.5 கோடி ரூபாய் மாநில அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங் கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஓராண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. இதற்கான பணிகளில் பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஈடுபட்டு வருகிறது.