சென்னை, ஆக. 24- சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்களின் சங்கமான “அய்மா” அலுவலகம் அமைந்துள்ள - முதலாவது பிரதான சாலை சந்திப்பில், உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் எம்.எம். அசோக் குமார், அண்மை யில் இதனை இயக்கி வைத்தார். சென்னை வாகன உதிரிபாக உற்பத்தி கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் அளித்த கோரிக் கையை ஏற்று, இந்தத் தொழிற்பேட்டையி லேயே செயல்பட்டு வரும் கே-லைட் இன்ட ஸ்ட்ரீஸ் நிறுவனம் தமது சொந்த செலவில் இந்த உயர் கோபுர மின்விளக்கை அமைத்துக் கொடுத்துள்ளது. இந்த இடத்தைச் சுற்றியுள்ள 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவு, ஒளிவெள்ளத்தில் மிதக் கும். அன்றாடம் இவ்விடத்தைக் கடக்கும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக் கள் மற்றும் சிறு - கனரக வாகனங்கள் பயன் பெறுவர். இந்தக் கோபுர மின்விளக்குகள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஒளிரும் வகையில் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.