tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், நவ்லாக் ஊராட்சியில் 13 ஆவது வார்டு மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம்  அடிப்படை வசதிகள் செய்துதர மறுப்பதை கண்டித்து ஊராட்சி மன்ற கூட்டத்தை வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்து  போராட்டம் நடத்தினர்.

ஆவடி தொகுதிக்குட்பட்ட நெமிலிச்சேரி ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் அரிசி, பிரட், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதில் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் டி.தேசிங்கு, பூந்தமல்லி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், நெமிலிச்சேரி ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி, துணைத்தலைவர் வாசுகி எட்வின், திமுக நிர்வாகிகள் சன்.பிரகாஷ், பொன்.விஜயன், கு.சேகர், பா.கந்தன், கே.சுரேஷ்குமார், விமல்வர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.