tamilnadu

சென்னை ஓட்டேரியில் இன்று பிரகாஷ் காரத் பேசுகிறார்

சென்னை, அக். 19- கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழாவையொட்டி வட சென்னை மாவட்டக்குழு சார்பில் ஓட்டேரியில் ஞாயிறன்று (அக்.20)  பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். ஓட்டேரி செல்லத் தெருவில் ஞாயிறன்று மாலை 4 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன்  துவங்கும் பொதுக்கூட்டத்திற்கு  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். திருவிக நகர் பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ் வரவேற்கிறார்.  மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் பா.சுந்த ரராஜன், வடசென்னை மாவட்டச் செயலா ளர் எல்.சுந்தரராஜன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், காஞ்சி புரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்  எஸ்.கே.மகேந்திரன், எஸ்.ராணி, ஏ.விஜயகுமார், கே.எஸ்.கார்த்திஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். புதுகை பூபாளம் கலைக்குழுவின் அரசியல் விழிப்புணர்வு தர்பார், சென்னை பறை, சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.