tamilnadu

img

பள்ளிக்கல்வித் துறை விழாவில் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை!

கூகுள் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருப்பவர்களாக நமது மாணவர்களை உருவாக்கக் கூடாது; மனித சிந்தனைக்கும், ஏ.ஐ. சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

“மாணவர்களுக்குள் சாதிய உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் இல்லாமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்; ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் சொல்லித் தருபவர்கள் அல்ல, தனது கல்வியையும், அனுபவத்தையும் சொல்லித் தருபவர்கள்.

வெறும், கூகுள் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருப்பவர்களாக நமது மாணவர்களை உருவாக்கக் கூடாது; மனித சிந்தனைக்கும், ஏ.ஐ. சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும். மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவை மேம்படுத்தவேண்டியது நமது கடமை. புதுப்புது முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.