tamilnadu

img

துப்பாக்கிச்சூடு நடத்திய 17 காவலர்கள் மீது நடவடிக்கை - ஆணையம் பரிந்துரை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தின் நூறாவது நாளில் ஏற்பட்ட கலவரத்தின்போது, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையின் படி, 
துப்பாக்கிச்சூடு நடத்தியபோது காவல் உயர் அதிகாரிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இருக்கவில்லை.
துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு நன்றாக கேட்கக்கூடிய மெகா போன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படவில்லை.
துப்பாக்கிச்சூடு நடத்த காவலர்களுக்கு கொடுத்த கட்டளை மற்ற அதிகாரிகளுக்கு தெரியாமலேயே இருந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்க பரிந்துரை செய்துள்ளது.
துப்பாக்கிச்சூடு தொடர்பாக 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
 

;