tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

திருவிக நகர் மாதர் சங்க மாநாடு

சென்னை, ஜூலை 5- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திரு விக நகர் பகுதி 17ஆவது மாநாடு ஓட்டேரியில் சனிக் கிழமை (ஜூலை 5) நடைபெற்றது. துணைத் தலைவர் பி.தனலட்சுமி தலைமை தாங்கினர்.  மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.பிரமிளா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் கே.ராஜலட்சுமி வேலை அறிக்கை யையும், பொருளாளர் எஸ்.பூங்குழலி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.  கே.சுரேஷ்(வாலி பர்சங்கம்), பா.தேவி.எம்.கோட்டீஸ்வரி (மாதர்சங்கம்) சமூக செயல்பாட்டாளர் டி.சுசிந்திரா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். எஸ்.தாமரை நன்றி கூறினார். தலைவராக ராஜேஸ்வரி, செயலாளராக தனலட்சுமி, பொருளாளராக ஜெயசித்ரா உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

நகராட்சி, குடிநீர் துறையில்  2, 569 பேருக்கு வேலை

சென்னை, ஜூலை 5 - தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு:- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சி இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் ஆகிய துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடங்களான உதவிபொறியாளர் / இளநிலை பொறியாளர், உதவிப் பொறியாளர் (திட்டம்), வரைவாளர், பொதுப்பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர், நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகிய 2569 பணியிடங்களை நிரப்பிட 2.2.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தரவரிசை பட்டியலின்படி, கலந்தாய்வு நடத்தி துறைகள் வாரியாக பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேற்காணும் நேரடித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://tnmaws.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலமானார்

சென்னை, ஜூலை 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முருகன் மாமனார் ஏ.முருகன் வெள்ளியன்று (ஜூலை 5)காலமானார். அம்பத்தூர் கொரட்டூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.கார்த்தீஷ் குமார், எல்.பி.சரவணத்தமிழன், அ.விஜயகுமார், சி.திருவேட்டை, இரா.முரளி, இ.சர்வேசன், எஸ்.கே.முருகேஷ், வி.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.மூர்த்தி, நாகராணி, அம்பத்தூர் பகுதிச் செயலாளர் ஆர்.கோபி, சி.சுந்தரராஜன், இ.பாக்கியம், சி.ஆனந்த், எம்.பகத்சிங் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சனிக்கிழமை வில்லிவாக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.