tamilnadu

img

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை தாமதம்: வேட்பாளர்கள் அவதி

திருவண்ணாமலை, ஜன. 3- திருவண்ணாமலை மாவட்டத் தில் வாக்கு எண்ணிக்கை பணி  தாமதமானதால் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து அவதிப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத் தில், 34 மாவட்ட கவுன்சிலர்கள் 341 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 860 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 6,207 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 7,442 பதவிகளுக்கு போட்டியிட, 16  ஆயிரத்து, 593 பேர் மனு செய்தனர்.  இதில், 47 ஊராட்சித் தலைவர்கள், மூன்று ஒன்றிய கவுன்சிலர்கள், 1,544 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என, 1,594 பேர், போட்டியின்றி தேர்வு  செய்யப்பட்டனர்.  மீதமுள்ள, 5,848 பதவிகளுக்கு, 12  ஆயிரத்து, 191 வேட்பாளர்கள் தேர்த லில் போட்டியிட்டனர். இவர்களுக் கான வாக்குப்பதிவு, கடந்த, 27 மற்றும்  30 ஆகிய தேதிகளில், முடிந்த நிலை யில் திருவண்ணாமலை மாவட்டத் தில், 18 மையங்களில் ஓட்டு எண்ணப்  பட்டது.  வாக்கு எண்ணிக்கையில், 3,000  காவலர்கள் பாதுகாப்பு பணியிலும், 10 ஆயிரம் பேர், ஓட்டு எண்ணும் பணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், 1,500 க்கும்  மேற்பட்ட அலுவலர்கள் ஓட்டு எண்ணும் பணிக்கு வரவில்லை. இதனால், அனைத்து மையங்களிலும், காலை,  8 மணிக்கு தொடங்க வேண்டிய ஓட்டு  எண்ணிக்கை, 10:30 மணிக்கு பிறகே  தொடங்கியது. மேலும், இவர்க ளுக்கு காலை டிபன், மதிய உணவு  சரியான நேரத்தில் வழங்கப்பட வில்லை. காலதாமதமாக உணவு வந்தவுடன் சாப்பிடச் சென்றதாலும், 3 மணி நேரம் ஓட்டு எண்ணும் பணி பாதிக்கப்பட்டது.

வந்தவாசி ஒன்றியம் 1ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டி யிட்ட பச்சையம்மாள் 30 ஓட்டு வித்தி யாசத்தில் வெற்றி பெற்றார். குறை வான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், திமுகவினர் மறு  ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்  என வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில், திரு வண்ணாமலை ஒன்றிய ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அங்கு ஒரு ஓட்டுப்பெட்டி காலியாக திறந்து கிடந்தது. இதனால், திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்  துறையினர் அந்த ஓட்டுப்பெட்டி மாதிரி வாக்குப் பதிவு நடத்த பயன்  படுத்தப்பட்டவை எனக் கூறியதை யடுத்து, வாக்குவாதத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர். செய்யாறில் தபால் ஓட்டுப்பெட்டி யின் சாவி, திடீரென காணாமல் போன தால், பெட்டியின் ஸ்குருவை கழற்றி பெட்டியை திறந்தனர். வந்தவாசி ஓட்டு எண்ணும் மையத்தில், கண்ட வரப்பட்டி பகுதிக்கான ஓட்டுப்பெட்டி  பூட்டை சாவி மூலம் திறக்க முடியாத தால், கல்லால் பூட்டை உடைத்து திறந்தனர். வாக்கு எண்ணிக்கை தாம தம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி வாக்கு எண்ணிக்கை மையங்களில்  ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆடையூர்  கிராம ஊராட்சி மன்றத் தலைவர்  பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்க ளில், தேவதாஸ் மற்றும் கலைவாணி ஆகியோர், தலா 906 வாக்குகள் பெற்றிருந்தனர். எனவே, தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, திரு வண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் நடத்தும் அலு வலருமான அண்ணாதுரை, 2 வேட்பா ளர்களின் பெயர்கள் அடங்கிய துண்டுச் சீட்டுகளை எழுதி, குலுக்கல்  நடத்தினார். இதில் வேட்பாளர் கலை வாணி வெற்றி பெற்றார்.  வியாழன்  காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு  எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (ஜன.3) காலை வரை நீடித்தது. திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில்  செய்தியாளர் களுக்குப் பேட்டி யளித்த மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் எம்.ஆர். சிபி. சக்கர வர்த்தி, தமிழகத்திலேயே முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை யின்போது ஏற்படும் சட்டம்-ஒழுங்கு  பிரச்சனையை சமாளிக்க ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட 110 நட மாடும் போலீஸ் குழுக்கள் (மொபைல் டீம்கள்) அமைக்கப் பட்டன.  மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து 110 நடமாடும் போலீஸ் குழுக்களின் நடவடிக்கைகள் கண்கா ணிக்கப் பட்டு, தேவையான இடங்க ளுக்கு அருகில் உள்ள நடமாடும்  போலீஸ் குழுக்கள் அனுப்பிவைக் கப்பட்டதாக தெரிவித்தார்.  திருவண்ணாமலை மாவட்டத் தில், பல்வேறு இடங்களில் ஓட்டு  எண்ணும் பணி தாமதமாக நடை பெற்றதாலும், தபால் ஓட்டக்கள் எண்ணுவதில் தாமதம் ஏற்பட்ட தாலும், வெற்றிச் சான்றிதழ் பெற முடியாமல், வேட்பாளர்கள் இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் காத்துக்கிடந்தனர்.

;