உயிரிழந்த 9 தொழிலாளர்களுக்கு தலா ரூ.40 லட்சம் வழங்குக திருவள்ளூர் சிஐடியு கோரிக்கை
திருவள்ளூர், அக்.7- எண்ணூர் சிறப்பு பொரு ளாதார மண்டல திட்ட, மிக உய்ய அனல் மின் நிலைய கட்டுமானத்தின் போது பலியான 9 தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (அக்.7), அனல் மின் நிலைய வாயில் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்கள் இறப்புக்கு பெல் நிறு வனமே பொறுப்பு எனவும், துணை ஒப்பந்த நிறுவன மான மெட்டல் கர்மா நிறு வனத்தை வெளியேற்ற வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கையை கண்காணி காத தொழிற்சாலை இணை இயக்குநர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும், மற்ற எந்த மின் நிலை யங்களிலும், குறிப்பாக நிலக்கரி சுரங்களில் கூட சேமிப்பு கிடங்குகளின் மேற்கூரை இல்லாத நிலை யில், நிலக்கரி சேமிப்பு கிடங்கிற்கு மேற்கூரை தேவையில்லை என்கி றார்கள். யாருக்காக இந்த பணிகள் நடைபெறுகிறது என்பது தெரியவில்லை. இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் ரூ.40 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், கட்டுமான தொழிலுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை அமல் படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கே.விஜயன் செய்தியாளர் சந்திப்பு எண்ணூர் சிறப்பு பொரு ளாதார மண்டலத்தில் அனல் மின் நிலைய கட்டு மானத்தின் போது 9 வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீடு அளித்தாலும் ஈடுசெய்ய முடியாத இழப்பு - அவர்களது குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ளது. தற்போது இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு, ஊழியர் நட்ட ஈட்டு சட்டம் 1923 அடிப் படையில் உரிய நட்டஈடு வழங்கிட வேண்டும். அவர்களது ஊதியமானது தமிழ்நாடு அரசின் கட்டு மானத்தொழிலுக்கு நிர்ண யம் செய்த குறைந்தபட்ச ஊதியமாக ஸ்கில்டு தொழி லாளி என்ற முறையில் மாதம் ரூ.33903வழங்க வேண்டும். வெளி மாநிலத்தொழி லாளி என்ற முறையில் கூடுதல் ஊதியமாக ரூ.5085 வழங்கியிருக்கவும் வேண்டும்.இந்த ஊதி யத்தின் படி இறந்த ஊழி யரின் வயது சராசரி 28 என்று கொண்டால், ஊழியர் இழப்பீடு கணக்குப்படி 41, லட்சத்து 29, ஆயிரத்து 905 ரூபாய், ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கு வழங்கிட வேண்டும். அத்தொகை யினை விபத்து இழப்பீடு வழங்கும் அதிகாரியோ, அல்லது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் ஆணை யாளர் சமரசம் 2 ல், அதி காரியிடம் டெபாசிட் செய்ய வேண்டும். மேலும் பாதுகாப்பு ஏற்பாட்டை முறையாக செய்யத்தவறிய கார ணத்தினாலேயே இந்த விபத்து ஏற்பட்டு, 9 பேர் பலியானதற்கு காரண மான மெட்டல் கர்மா டெக்கா னலாஜி நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்த திட்ட பணியிலிருந்தே வெளியேற்ற வேண்டும். மேலும் இந்த நிலக் கரி கூடாரத்தினால் மீண்டும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த முறையில் கூடாரம் அமைக்கும் பணியை முற்றிலும் கைவிட வேண்டும் எனவும் விஜயன் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜி. சலீல்குமார் தலைமையில் தாங்கினார். சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.விஜயன், மாவட்ட துணைத் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் இ.ஜெயவேல், சுமை பணி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ரமேஷ்குமார் ஆகியோர் பேசினர். NTECL, HPCL, சிபிசிஎல்,எல் அண்டு டி போன்ற தொழிற் சாலைகளில் இருந்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
