தொழிலாளர்கள் மீது பொய் புகார் அதானி துறைமுகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
திருவள்ளூர், மே 21 - காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் வழங்கிய நிவாரணப் பொருட்களை வீசி எறிந்து பெண்கள் போராட்டத்தல் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால், வருவாய் இன்றி வறுமையில் வாடி வந்தனர். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அதானி துறைமுகம் சார்பில் வருவாய் இழந்து தொழிலாளர்களுக்கும், அப்பகுதிவாசி களுக்கும் அரிசி உள்ளிட்ட நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டன. அப்போது தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரினர். அதற்கு நிர்வாகம் பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. ஊரடங்கால் பணிக்கு வர இயலவில்லை என்பதால், ஊதியத்தை தர மறுப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த துறைமுக நிர்வாகம் சம்பந்தப்பட்ட தொழி லாளர்கள் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்துள்ள தாக கூறப்படுகிறது. காவல்துறையினர் தொழிலாளர்களை அழைத்து விசாரணை நடத்தியதால், கொதிப்படைந்த காட்டுப்பள்ளியை சேர்ந்த பெண்கள், அதானி துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். துறைமுக நிர்வாகம் வழங்கிய நிவாரண பொருட்கள் அடங்கிய பைகளை வீசி எறிந்து முழக்கமிட்டனர்.
ஒடிசா மாநில தொழிலாளியை தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது
திருவள்ளூர், மே 21- திருவள்ளூர் அருகே செங்கல் சூளையில் ஒடிசா மாநில தொழிலாளியை தாக்கிய வழக்கில் காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் 300க்கும் மேற்பட்ட ஒடிசா மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு 1000 செங்கல் தயாரிக்க ஊதியமாக 25 ரூபாய் தரப்படுகிறது. நாள்தோறும் 15 மணி நேரம் வரை வேலை பார்க்கும் ஒருவருக்கு வாரம் 300 ரூபாய் மட்டுமே கூலியாக கொடுக்கப்படுறது. இந்த சொற்ப வருமானத்தில்தான் தொழிலாளர்கள் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால், உணவுக்கு வழியின்றி தவித்த தொழிலார்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டனர். இதனால் ஏற்பட்ட தகராறில், செங்கல் சூளை உரிமையாளர் முனுசாமி, அவரது சகோதரர் லட்சுமிபதி உள்ளிட்டோர் தொழிலாளர்களை உருட்டு கட்டைகளால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த 9 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்னர். பலத்த காயமடைந்த போபால் சங்கு, தும்மா புரியா ஆகிய இரு தொழிலாளர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பான காவல்துறை வழக்கு பதிந்து செங்கல் சூளை மேலாளர் ஆசீர்வாதத்தை கைது செய்துள்னர். தலைவமறையாக உள்ள செங்கல் சூளை உரிமையாளர் முனுசாமி உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.
மாணவருக்கு தொற்று
காட்பாடி, மே 20- காட்பாடியில் காவல்துறை ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கல்லூரியில் படிக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளான மாணவருக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை, மே 20- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 7 வயது சிறுவன் 3 பெண்கள் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 155லிருந்து 166ஆக உயர்ந்துள்ளது. 41 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.