tamilnadu

திருவள்ளூர் மற்றும் சென்னை முக்கிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

திருவள்ளூர்,ஜூன் 27-  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  திருவள்ளூர் மாவட்ட 14 ஆவது மாநாடு மணவாளநகரில்  நடை பெற்றது.  மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் கலைநேசன் தலைமை தாங்கினார்.  துணைத் தலைவர் இசக்கியம்மாள் வர வேற்றார்.  துணைத் தலைவர் ஜி.பழனி அஞ்சலி தீர்மான த்தை வாசித்தார். மாநில துணைத் தலைவர் ஆர்.தனஞ்செழியன் துவக்க வுரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் வேலாயுதம் வேலை அறிக்கையையும், பொருளா ளர் பாஸ்கரன் வரவு செலவு கணக்கையும் வாசித்தனர். மாநிலச் செயலாளர் தேன்மொழிச்செல்வி, தலைமை ஆசிரியர் ஞான சேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் உதயன் நிறைவுரையாற்றினார். மணிமாறன் நன்றி கூறினார்.

புதிய நிர்வாகிகள்

மாவட்ட தலைவராக அ.கலைநேசன், செயலாள ராக எஸ்.மோசஸ் பிரபு, பொருளாளராக ஆர்.ஜி.பாஸ்கரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

 

பஸ் டே கொண்டாடிய புது கல்லூரி மாணவர்கள் 9 பேர் சஸ்பெண்ட்

சென்னை, ஜூன் 27-  சென்னையில் பஸ் டே கொண்டாடிய புது கல்லூரி மாணவர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.  கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடையும் விதித்துள்ளது. மேலும் பேருந்துகளின் மேற்கூரைகளில் ஏறவோ, பயணிகளுக்கு இடையூறு செய்யவோ கூடாது என காவல்துறையும் எச்சரித்திருந்தது. ஆனால், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதாகக் கூறி அரசு பேருந்து மேற்கூரையின் மீது ஏறி பாடியும், ஆடியும் பொதுமக்களுக்கு இடையூறு அளித்தனர். இதையடுத்து, அக்கல்லூரி மாணவர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.  இந்நிலையில் கடந்த 22ஆம் தேதியன்று பூந்தமல்லியிலிருந்து அண்ணா சாலை செல்லும் 25 ஜி பேருந்தில் பயணிகள், நடத்துனருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புது கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.  உடனடியாக அங்கு சென்ற அண்ணா சாலை காவல்துறையினர், விசாரணை நடத்தி 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பான விவரங்களை புது கல்லூரி நிர்வாகத்திற்கு அண்ணா சாலை காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, இடையூறு அளித்த மாணவர்கள் மீது அக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்த நடவடிக்கையின் படி 9 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.