செயலி மூலமாக விளையாட்டுடன் கூடிய கல்வி
சென்னை, டிச. 6- இந்தியாவின் முதல் வகையான கேமிஃபைட் எனப்படும் விளையாட்டுடன் கூடிய கற்றல் கல்வித் தொழில்நுட்பப் பயன்பாடான ஸ்டெப் செயலி வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வி முதல் பள்ளி இறுதி ஆண்டு வரையி லான கல்வி வரை கல்வியில் இது புதிய புரட்சியை ஏற்ப டுத்தும். இந்த செயலி குறித்து கருத்துத் தெரிவித்துப் பேசிய நடிகர் அமிதாப் பச்சன் மாணவர்களுக்கு எதிர்காலத்தை உங்களுக்குச் சொந்தம் ஆக்குங்கள் என்ற தெளிவான அழைப்பை விடுத்தார். ஸ்டெப் செயலியின் விளையாட்டு, கற்றல் மற்றும் மாண வர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையையும் பெற்றுத்தரும். அவர்களின் எதிர்காலத்துக்கு உதவும் வகையில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 கோடி வரை கல்வி ஊக்கத் தொகை பெற வாய்ப்பை ஏற்படுத்தும். எந்தவொரு திறன்வாய்ந்த சிறப்பான குழந்தையும் விடுபடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புழல் மத்திய சிறை வளாகத்தில் சிறைவாசிகளுக்கு எழுத்தறிவு பயிற்சி
திருவள்ளூர், டிச. 6- திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறை வளாகத்தில், பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்கத்தினால், 757 சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ், மத்திய மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் பணியாற்றி வருகின்ற 40 ஆசிரியர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு நூல் சார்ந்த பாடத்திட்டப் பயிற்சி பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் முனைவர்.வி.சி.இராமேஸ் வர முருகன் தலைமையில் வழங்கப்பட்டது. தமிழக அரசால் நடப்பு 2019-20ஆம் ஆண்டில் செயல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள 757 சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 9 மத்திய மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் பணியாற்றி வருகின்ற 40 ஆசியரியர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட புழல் மத்திய சிறை வளாகத்தில், டிச. 5, 6 ஆகிய இரண்டு நாட்களில் அடிப்படை எழுத்தறிவு நூல் சார்ந்த பாடத்திட்டப் பயிற்சியானது பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தினால் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் சென்னை சரக சிறைத்துறை துணைத்தலைவர் எ.முருகேசன், புழல் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஜி.பி.செந்தாமரைக்கண்ணன், இணை இயக்குநர் சி.செல்வராஜ், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.திருவளர்ச்செல்வி, துணை சிறைகண்காணிப்பாளர் பெ.தர்மராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம்.திருவரசு, மாவட்டக் கல்வி அலுவலர்கள், பிற சிறைத்துறை மற்றும் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கக அலுவ லர்கள் கலந்துகொண்டனர்.