“பாஜகவை அதிமுக விமர்சிப்பதில்லை என்கிறார்கள். தேர்தல் களத்தில் இல்லாத காரணத்தால் பாஜக குறித்து நாங்கள் விமர்சனம் செய்வதில்லை. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி நிலவுகிறது. பாஜக மூன்றாவது இடத்தைப் பிடிக்கப்போகிறதா அல்லது நோட்டாவை பிடிக்கப் போகிறதா என்பது தெரியவில்லை” என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சமாளித்துள்ளார்.