tamilnadu

img

தீக்கதிர் முகவர் அண்ணாமலை மறைவு

தீக்கதிர் முகவர் அண்ணாமலை மறைவு

கடலூர், செப்.30- தீக்கதிர் பத்திரிகையின் முகவராக  25 ஆண்டுகள் கடலூரில் பணியாற்றிய தோழர் அண்ணாமலை(85) வயது மூப்பு காரணமாக காலமானார்.  போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் கடலூர் பணிமனையின் முன்னாள் செயலாளர் சண்முகத்தின்  தந்தை அண்ணாமலை. 25 ஆண்டுகளுக்கு மேலாக கடலூரில் தீக்கதிர் முகவராக திறம்பட செயல்பட்டவர். கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவால் தீக்கதிர் விநியோகம் செய்ய முடியாத நிலையில் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். மிதிவண்டியை பயன்படுத்தி பல கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று தீக்கதிரை தினம் தோறும் விநியோகித்து வந்தவர் அண்ணாமலை. அவருக்கு சாந்தி, பத்மாவதி, தனம், லலிதா ஆகிய மகள்களும் உள்ளனர். சீத்தாராம் யெச்சூரியின் நினைவு தினத்தை முன்னிட்டு, உடல் தானம் செய்வதற்கு சிபிஎம் அழைப்பு விடுத்தது. அதன் அடிப்படையில், அவருடைய குடும்பத்தினர் அண்ணாமலை உடல் தானத்திற்கான படிவத்தை கட்சியிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில், அண்ணாமலை மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையில் கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. உடலை சிதம்பரம் ராஜா முத்தையா கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கினர். முன்னதாக, கடலூர் குப்பன்குளத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் கட்சி தோழர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அண்ணாமலையின் உடலுக்கு சிபிஎம் சார்பில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், பழ.வாஞ்சிநாதன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கீரான், நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் ஸ்டீபன் ராஜ், போக்குவரத்து சங்க நிர்வாகிகள் ஜி.பாஸ்கரன், எம்.முத்துக்குமரன், கண்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவருடைய உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.