tamilnadu

தென்னிந்திய அணைகளில் நீர்மட்டம் 10 ஆண்டுகளில் இல்லாத சரிவு!

சென்னை, ஏப்.27- இந்தியாவின் தற்போதைய கோடைக்காலத்தில் எந்த ஆண்டும்  இல்லாத அளவுக்கு வெப்பம் கடு மையாக உள்ளது. பல இடங்களில்  வறட்சியும், நீர் தட்டுப்பாடும் ஏற்  பட்டுள்ளது. வெப்ப அலை காரண மாக தினமும் பல்வேறு மாநிலங்க ளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரு கின்றன. 

இந்நிலையில் தான், தென்னிந்  திய அணைகளில் 10 ஆண்டுகளில்  இல்லாத அளவுக்கு இந்தாண்டு நீர்  மட்டம் சரிந்துள்ளது, மத்திய நீர் ஆணையம் (CWC) வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நீர் இருப்பு 29 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வெறும் 17 சதவிகிதமாக சரிந்துள்ளது. 

கடந்த 10 ஆண்டு கால சராசரி  நீர் இருப்பு 23 சதவிகிதம் என்ற  நிலையில், தற்போது அதைக் காட்டிலும் குறைவாக 17 சதவிகி தம் என்ற அளவிற்கு நீர் இருப்பு குறைந்துள்ளது.

தமிழ்நாடு, கேரளம், கா்நாட கம், ஆந்திரம், தெலுங்கானா மாநி லங்களை உள்ளடக்கிய தென் னிந்தியாவில், மத்திய நீா் ஆணை யத்தின் கண்காணிப்பில் 42 நீா்த் தேக்கங்கள் உள்ளன. அந்த நீா்த்  தேக்கங்களின் மொத்த கொள்ள ளவு 53.334 பில்லியன் கன மீட் டர்களாகும். 

தற்போது இந்த நீா்தேக்கங்க ளில் நீர் இருப்பு வெறும் 8.865 பில்லி யன் கன மீட்டா்களாகவே உள்ளது.  இது இந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 17 சதவிகிதம் ஆகும். 

;