tamilnadu

img

வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்

சென்னை, அக்.27- தமிழ்நாட்டின் வரைவு வாக்கா ளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்டவை மேற்கொள்ள லாம். தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ் நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதி கம்.

தமிழ்நாட்டில் 3.10 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடப்படும் என்று கூறி யுள்ளார்.

சோழிங்கநல்லூர்-கீழ்வேளூர்

ஜனவரி 1, ஏப்.1, ஜூலை 1,  அக்.1-ல் 18 வயது பூர்த்தியடைந் தவர்கள் வாக்காளராக விண்ணப்பிக்கலாம். நவம்பர் 9 ஆம் தேதி வாக்குச் சாவடிகள் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி யில் 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நவம்பர் 4, 5,18,19 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற் கொள்ள சிறப்பு முகாம் நடத்தப் படும். கடந்த ஆண்டு 6.20 கோடியாக இருந்த வாக்கா ளர்கள் எண்ணிக்கை தற்போது 6.11 கோடியாக குறைந்துள்ளது.