tamilnadu

img

இருளர் மாணவர்களின் ‘உடும்புப்பிடி’யால் போராட்டம் வெற்றி

விழுப்புரம், ஆக.14- விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவல கத்தில் வியாழனன்று (ஆக.  13) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்  நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் இருளர் பழங்குடி இன மக்களின் கல்வி  வளர்ச்சியை பாதுகாக்கவும், இதுவரை  வழங்கப்படாமல் உள்ளசாதி சான்றிதழ் களை வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காலையில் இருந்து அலுவலகம் வராத   கோட்டாட்சியர் ராஜேந்திரன் மாலை 5 மணி யளவில் அலுவலகத்திற்கு வந்தார். மேலும்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அலட்சிய மாக பேசிவிட்டு சென்றவர் அலுவலத்தி லிருந்து வெளியே வரவில்லை. இதனால் காத்திருக்கும் போராட்டம் தொடர்ந்தது. இதற்கிடையே காவல்துறையினர் கோட்டாட்சியரிடம் 3 சுற்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சிபிஎம் மாவட்டச்  செயலாளர் என்.சுப்பிரமணியன், மலை வாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செய லாளர் இரா.சரவணன், தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்ட னர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்  படவில்லை. கோட்டாட்சியரின் ஆணவப் போக்கால் போராட்டம் இரவும் தொடர்ந்தது. இதையடுத்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் போராட்ட பிரிதிநிதிகளுடனும், கோட்டாச்சி யருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில்  கோட்டாட்சியர் ராஜேந்திரன் இந்த மாத இறுதிக்குள் சாதிச் சான்று அளிப்பதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார். இதை யடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர்.

;