tamilnadu

img

சிலந்தியும் நம் மன்னரும்

சிலந்தியும் நம் மன்னரும்     ஒன்று-
வாயால் பிழைப்பதால் 
சிலந்திக்கு மூலதனம்     எச்சில்
மன்னருக்கு மூலதனம்     வெறுப்பு
சிலந்தி வலை பின்னும்
உமிழ்நீர்ப் பசையால்
மன்னர் வலை பின்னுவதோ
துவேஷப் பகையால் 
சிலந்திக்கு வலை
அதன் வாழ்க்கை நெறி
மன்னருக்கு வலை
வஞ்சக மதவெறி 
சிலந்தி வலை விரிப்பது
வயிற்றுப் பசிக்காக
மன்னர் வலை விரிப்பது
அதிகாரப் பசிக்காக 
சிலந்தி வலை
வீட்டின் அழகுக்குக் கேடு
மன்னர் வலை
நாட்டின் அறத்திற்குக் கேடு 
எத்தனை முறைகள்
வலை அறுந்தாலும்
சிலந்தியும் மன்னரும்
சலிப்பதே இல்லை
மீண்டும் மீண்டும் பின்ன-

- வல்லம் தாஜுபால்