tamilnadu

img

வரத்துவாய்க்கால்களை சீரமைக்க கள்ளக்குறிச்சிஆட்சியர் உத்தரவு

வரத்துவாய்க்கால்களை சீரமைக்க  கள்ளக்குறிச்சிஆட்சியர் உத்தரவு

கள்ளக்குறிச்சி, அக்.8- கள்ளக்குறிச்சிமாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. வடகிழக்குபருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கிராமப்புற வரத்து வாய்க்கால்களை துரிதமாக தூர்வாரி மழைக்காலத்திற்கு முன் சீரமைக்க வேண்டும். குடிநீரை தவறாமல் குளோரினேசன் செய்து வழங்க வேண்டும். குப்பைகளை மக்கும், மக்கா குப்பை என தரம் பிரித்துதிடக்கழிவு மேலாண்மையில் அப்புறப்படுத்த வேண்டும். சாலைப் பணிகளை மழைக்காலத்திற்குமுன் முடிக்க வேண்டும். கலைஞர் கனவு இல்லம், பிரதமர் வீடு கட்டும் திட்டங்களில்கழிப்பறை கட்டி சுகாதாரம் பேண வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர்அறிவுறுத்தியுள்ளார்.கூட்டத்தில்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.