tamilnadu

img

சமையல் எண்ணெய் விலை ரூ.10 வரை குறைவு – எஸ்இஏ  

சமையல் எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் கிலோவுக்கு ரூ.10 வரை குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அதுல் சதுர்வேதி வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச சந்தையில் பாமாயில், சோயா, சன்ஃப்ளவர் எண்ணெய் வகைகளின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டதன் விளைவாக உள்நாட்டிலும் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் கடந்த சில மாதங்களாக நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் பயனடையும் வகையில் முடிந்த அளவு விலையை குறைக்க வேண்டுமென சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரியை ஒன்றிய அரசும் குறைத்தது. கடந்த 30 நாட்களில் சமையல் எண்ணெயின் விலை கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை குறைந்துள்ளது. இனிவரும் நாட்களில் மேலும் ரூ.3 முதல் ரூ.4 வரை குறைக்கப்பட உள்ளது. பண்டிகை காலத்தில் இந்த விலை குறைப்பால் நுகர்வோருக்கு ஓரளவு சுமை குறையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

;