tamilnadu

அதிமுகவுடனா? பாஜகவுடனா? பாமக பரிதவிப்பு

சென்னை, மார்ச் 17- மக்களவை தேர்த லில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி  பாமக எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி  சேருவதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராம தாஸ் விரும்புவதாகவும், ஆனால் பாஜக கூட்ட ணியை அன்புமணி ராம தாஸ் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் பெரும் பாலான மாவட்டச் செய லாளர்கள் பாஜக கூட்ட ணியை விரும்பவில்லை என்றும் இதனால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ரத்து செய்த தாகவும் தகவல்கள் வந்தன. இதனால் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

கூட்டணி விவகாரத் தில் கட்சியின் தலைமைக் குள் ஏற்பட்டிருக்கும் இந்த  முரண்பாடு குறித்து பாமக நிர்வாகிகள் இரு வர் பேசிக் கொள்ளும் ஆடி யோ ஒன்று சமூகவலை தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமியை பாமக எம்எல்ஏ அருள் சந்தித்து பேசி யுள்ளார். சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் முகாம் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற் றது. தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்ற தாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் திங்கட் ட்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளி யாகியுள்ளது.