“பாஜக மாநில தலைவருக்குப் பேட்டி கொடுப்பது மட்டும் தான் வேலை, ஆனால் அது தமிழகத்தில் எடுபடாது. மத்தியில் இருந்து அடிக்கடி தமிழகத்துக்கு வந்து செல்கிறார்கள். அதனால் மக்களுக்கு என்ன பயன்? எது சரி, தவறு என்று எடை பார்த்துப் போட்டுத் தீர்ப்பளிக்கக் கூடிய மக்கள் தமிழ்நாட்டு மக்கள். பாஜக ஏமாற்று வேலை தமிழகத்திலே எடுபடாது” என்று தங்களின் கள்ளக் கூட்டணியை மறைக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை நானும் விமர்சிக்கிறேன் பாருங்கள் என்று காட்டிக் கொண்டுள்ளார்.