தமிழகத்தில் 11, 12ம் வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டமே தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. புதிய முறையில் 5 பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என கூறப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து 11 மற்றும் 12ம் வகுப்புகளில் 4 பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய திட்டம் தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.