சுகாதார சீர்கேட்டால் மூச்சுத்திணறும் இருளர் இனமக்கள்!
அரசின் நடவடிக்கைக்காக காத்திருக்கும் ராமச்சந்திராபுரம் மக்கள்
சுற்றுச்சூழல் மாசால் தூக்கத்தை இழந்து மூச்சு திணறலால் தவிக்கும் ராமச்சந்திராபுரம் இருளர் இன மக்களை தமிழ்நாடு அரசு காப்பாற்ற வேண்டும் என அம்மக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த சூரப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராமச்சந்திரா புரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல தலைமுறைகளாக வசிக்கின்றனர். இந்த இடத்தில் வேறு சமுகத்தை சேர்ந்த சாதாரண ஏழை, எளிய மக்களும் குடியிருக்கும் பகுதியாகும். கர்ப்பிணி பெண்கள் பாதிப்பு இந்த குடியிருப்பையொட்டி ஆயில் கம்பெனி ஒன்று கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மூடப் பட்டது. இந்த நிலையில் மூடிய ஆலை யிலிருந்து, கடந்த 10 நாட்களுக்கு மேலாக, தாரை உருக்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. பாதுகாப்பற்ற முறையில் தார் எரிப்பதால் அதிலிருந்து வரும் கரும்புகை அப்பகுதியை கரும் மேகம் போல சூழ்ந்து கொள்கிறது. மேலும் ஜல்லி கற்களை எடுத்து வந்து அரைத்து மணலுக்கு மாற்றாக எம்சேண்டு விற்பனை செய்யப்படுகிறது. இதிலிருந்தும் தூசிகள் பரவுகிறது. கரும்புகையும், தூசியும் அப்பகுதியின் காற்றுமண்டலத்தை பெரிதும் பாதித்துள்ளது. சுற்றுச்சூழல்மாசால் அங்கு வாழும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும், மூச்சுத் திணறலுக்கு உள்ளாகிவருகின்றனர். இருளர் இன மக்களை ஊரை விட்டு காலி செய்ய மிரட்டல் தூசியின் காரணமாக காலையில் எழுந்ததும் கண்களை திறக்க முடிய வில்லை, கண்களில் அழுக்குகள் படிகிறது. இதனால் பார்வைக்குறை பாடு, நெஞ்சு எரிச்சல் என பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். இப்படி அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் தார் எரிப்பதை நிறுத்த வேண்டும், இந்த ஆலையை ஊருக்கு ஒதுக்குபுறமாக வைத்துக் கொள்ளுங் கள் என பொது மக்கள் கேட்டால், நீங்கள் வேண்டுமானால் ஊரை காலி செய்து விட்டு வெளியேறுங்கள், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அம்மக்களை தரக்குறைவாக பேசி யுள்ளனர். மிரட்டவும் செய்துள்ளனர். தார் காய்ச்சப்படுவதால், அதில் கலக்கும் ரசாயனம் கலந்த கழிவுநீர் பூமிக்கு அடியில் சென்று நிலத்தடி நீரும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இவ்வளவும் ராமச்சந்திரபுரத்தில் இருளர் இன மக்கள் குடியிருப்புகள் மத்தியில்தான் நடைபெற்று வருகிறது. சூரப்பூண்டி, பணத்து மேட்டு கண்டிகை, ராமச்சந்திராபுரம் ஆகிய கிராமங்களுக்கான குடிநீர் என்பது ராமச்சந்திரபுரத்திலிருந்து தான் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேற்படி கிராமங்களுக்கு குழாய்கள் மூலம் அனுப்பப்படுகிறது. சிபிஎம் வேண்டுகோள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் இது குறித்து தெரிவிக்கையில், எந்த அனுமதியும் இன்றி பாதுகாப்பு நட வடிக்கைகள் எதுவும் செய்யாமல் தார் உருவாக்கும் சட்டவிரோத தொழில் நடைபெற்றுவருகிறது. இதை அகற்ற கும்மிடிப்பூண்டி பிடிஒ-விடம் கடந்த வாரம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது அரசும், மாவட்ட நிர்வாகமும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த துன்ப துயரங்களிலிந்து இரு ளர் இன மக்களை பாதுகாத்து, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்று அம்மனுவில் அவர் கேட்டுக்கொண்டார். உடன் கட்சி யின் கும்மிடிப்பூண்டி வட்டக் குழு உறுப்பினர் எம்.வெங்கடாத்திரி மற்றும் கிராம பொது மக்கள் உடனிருந்தனர். - பெ.ரூபன்.