ஹாலோகிராம் ஸ்டிக்கர் முறையை மாற்றக் கூடாது: டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை!
கோவை, செப்.29- மதுபான பாட்டில்களில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டும் புதிய முறையை உட னடியாக நிறுத்த வேண்டும் என திங்களன்று கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டமைப்பினர், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர், மண்டல மேலா ளர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மேலாளர்களுக்கு மனு அளித்த னர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் அளித்த மனுவில், கடந்த 27 ஆம் தேதி யன்று கோவையில் டாஸ்மாக் கூட்டு நட வடிக்கை குழுவில், சிஐடியு, எல்பிஎஃப், டிடி பிடிஎஸ், ஏஐடியூசி, டிஜிடிஇயூ ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இக்கூட்டத் தில் அக்டோபர் 1 முதல், காலி பாட்டில்க ளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, அதற்கு பணம் வங்கி யில் செலுத்தும் முறையை டாஸ்மாக் நிர்வா கம் அமல்படுத்த உள்ளது. ஆனால், இது ஊழி யர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். எனவே மதுபான நிறுவனங்களே ஸ்டிக்கர்களை பாட்டில்களில் ஒட்டி அனுப்ப வேண்டும். கடைகளில் பணம் செலுத்தும் இடமும், விற் பனை இடமும் மாற்றப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்க ஏற் பாடு செய்ய வேண்டும். ஆவணங்களை பரா மரிக்க கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். மதுப்பெட்டிகள் இறக்குவதை வாகன ஒப்பந்தக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 2003 இல் பணியில் சேர்ந்த போது கொடுக்கப்பட்ட வேலையை மட்டுமே செய்ய வேண்டும். கூடுதல் பணிகளை கட்டா யப்படுத்தக் கூடாது என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தற்போதைய முறை யைத் தொடர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். முன்னதாக இந்த மனு அளிக்கும் நிகழ் வில், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் ஜான் அந்தோணிராஜ், மாவட்ட பொதுச்செயலா ளர் செந்தில்பிரபு, எல்பிஎப் சுப்பிரமணி, பாட் டாளி தொழிற்சங்கம் ஜீவா, ஏஐடியுசி சர வணன், அரசு பணியாளர் சங்கம் இன்னாசி முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
