தீக்கதிருக்காகவே உண்டியலில் சிறுகச் சிறுக சேமித்த தோழர்
விழுப்புரம், ஜூலை 19- விழுப்புரம் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா பதிவின் போது கே.சையத் ஜகாங்கீர் என்பவர் உண்டியலில் சேமித்து வைத்த தொகையை தீக்கதிர் சந்தாவுக்கு வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிபிஎம் மாவட்டக் குழு சார்பில் இடைக்குழுக்கள் சார்பில் தீக்கதிர் சந்தா இயக்கம் தீவிரமாக நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், கண்டாட்சிபுரம் இடைக் குழு சார்பில் வீரபாண்டியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேகரிப்பின் போது மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரனிடம் கிளைச் செயலாளர் கே.சையத் ஜகாங்கீர் ஆண்டு சந்தா தொகையை தனதுசேமிப்பில் இருந்து வழங்கினார். தீக்கதிர் சந்தா பதிவுக்காகவே தினந்தோறும் உண்டியலில் சிறுகச் சிறுக பணத்தை சேமித்து வந்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வேல்மாறன், வட்ட செயலாளர் எஸ்.கணபதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.தாண்டவராயன், வே.உமா மகேஸ்வரி உட்பட பலர் உடன் இருந்தனர்.