tamilnadu

img

திமுக வேட்பாளர் மற்றும் சிபிஎம் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தார்

பெரம்பூர் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் திருவள்ளுவர் தெருவில் பிரச்சாரம் செய்தார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதுரை, கோவை மக்களவைத் தொகுதி சிபிஎம் வேட்பாளர்கள் சு.வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன் ஆகியோரை ஆதரித்து காணொளிக் காட்சி மூலம் அரிவாள்சுத்தியல் நட்சத்திர சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை செய்யப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்(சிஐடியு) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வாகனம் முன்னாள் சம்மேளன துணைத்தலைவர் என்.முருகைய்யன், சம்மேளனப்பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், சம்மேளனக்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் வடிவமைக்கப்பட்டது. குக்ஸ்சாலை ஏ.பி.நினைவகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த வாகன பிரச்சார பயணத்தை சம்மேளனத்தலைவர் ஏ.பி.அன்பழகன் செங்கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் சம்மேளனப்பொருளாளர் வி.தயானந்தன், போக்குவரத்துத்தொழிலாளி இதழ் ஆசிரியர் கஜேந்திரன் ஆகியோர் உள்ளனர். 

;