மைய பணிகளை செய்வதற்கு புதிய செல்போன் 5ஜி சேவைக்கான சிம் கார்டு மற்றும் மையங்களில் இணையதள இணைப்பு வழங்க வேண்டும், இகேஒய்சி, ஓடிபி மற்றும் எப்.ஆர்.எஸ். முறையை கைவிட வேண்டும், இபிடிஎஸ் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் பயனாளிகளுக்கு கையொப்பம் பெற்று டி ஹெச் ஆர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சங்கம் சார்பில் காசிமேட்டில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகி சசிகலா, மண்டல நிர்வாகி ரத்னா, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் டி.வெங்கட், அமைப்பு சாரா மாவட்ட துணை தலைவர் எஸ்.லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.