சென்னை:
மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் அக்.21 முதல் துவங்க இருந்த காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.18 வயதுக்கும் கீழுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் நேரடியாக உதவித்தொகை வழங்க அரசுக்கு பரிந்துரைசெய்யப்படும். பார்வை, செவித்திறன்பாதிப்பு உள்ளிட்ட 75 விழுக்காட்டிற்கு மேல் உள்ள ஊனமுற்றோர் சட்டம் அங்கீகரித்துள்ள 21 வகை மாற்றுத் திறனாளி களுக்கும் கடும் ஊனமுற்றோர் உதவித் தொகை வழங்க கொள்கை முடிவெடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
ஏடிஎம் மூலம் உதவித்தொகை பெற்றிட
வங்கிகளுக்கு வலியுறுத்தப்படும். உதவித் தொகைக்கு நேரடியாக விண்ணப்பிக்க சிட்டிசன் போர்ட்டல் உருவாக்கப்படும்.விதிமுறைகளுக்கு மாறாக கீழ்மட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் செயல்படாது இருக்க உரிய வழிகாட்டு நெறிமுறை கள் உருவாக்கப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர் அத்துல்ய மிஸ்ரா தலைமையில் தலைமை செயலகத்தில்எழுத்துப்பூர்வ வாக்குறுதி அழிக்கப் பட்டதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமூகப் பாதுகாப்பு திட்ட இயக்குனர் என். வெஙகடாசலம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்ட அதிகாரிக ளும், கூட்டு இயக்கம் சார்பில் எஸ்.நம்பு ராஜன், டி.எம்.என். தீபக், பி. மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.