tamilnadu

விருப்பமான மேல்படிப்பை படிக்க அனுமதிக்காத தந்தை மீது மகள் புகார்

சென்னையில் தனக்கு விருப்பமான மேல்படிப்பை படிக்க அனுமதிக்காத தந்தை மீத காவல்துறையில் மகள் புகார் அளித்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பிளஸ்2 முடித்த மகளை அவரது விருப்பப்படி மேல்படிப்பை படிக்க அனுமதிக்காத தந்தை மகளின் மதிப்பெண் பட்டியல் மாற்றுச்சான்றிதழை தர மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மாணவி பாட புத்தகத்தின் பின் பக்கத்தில் உள்ள உதவி எண்ணை தொடர்பு கொண்டு தந்தை மீது குழந்தைகள் நல அதிகாரிகளிடம் மாணவி புகார் தெரிவித்தார். மேலும் அந்த மாணவி தந்தை மீது காவல்துறையிலும் புகார்அளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.