விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் போராட்டம் வெற்றி முதற்கட்டமாக 45 குடும்பத்தினருக்கு பட்டா வழங்குவதாக உறுதி
நாமக்கல், ஆக.20- பட்டா கேட்டு விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலை யில், முதற்கட்டமாக 45 குடும்பத் தினருக்கு பட்டா வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ள னர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் தாலுகாவிற்குட்பட்ட பல்லக்காபாளையம், ஆயிகவுண் டம்பாளையம், மலைப்பாளையம், நல்லாம்பாளையம், வஞ்சிபாளை யம், குளத்துக்காடு உள்ளிட்ட பகுதி களில் திரளான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 149 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பல்லக்காபாளையம் கிராம நிர் வாக அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த்துறையினர், அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆய்வு செய்து படிப்படியாக பொதுமக்களுக்கு பட்டா வழங்கு வதாக உறுதியளித்தனர். தொடர்ந்து, அரசுக்கு சொந்தமான தரிசு புறம்போக்கு நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு நிலங்களும் அளவீடுகள் செய்யப்பட்டன. ஆனால், படிப்படியாக வழங்குவ தாகக்கூறிய வீட்டுமனை பட்டாக் கள் இதுவரை வழங்கப்பட வில்லை. இந்நிலையில், வாடகை வீட்டில் வசித்து வரும் இப்பகுதி பொதுமக்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்க ளன்று குமாரபாளையம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் துரை சாமி தலைமை வகித்தார். நிர்வாகி கள் கோவிந்தன், ரேவதி, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.சக்திவேல், மின் வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி ஆறுமுகம் உட்பட 91 குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல றிந்து வந்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, வட் டாட்சியர் சிவகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதன்பின் சங்கத்தின் மாவட்டத் தலைவர் துரைசாமி கூறுகையில், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரி கள் நேரில் சென்று பயனாளிக ளுக்கு வழங்க வேண்டிய இடங் களை ஆய்வு செய்து, 45 நபர்க ளுக்கு இடம் தேர்வு செய்யப்பட் டது. செப்.9 ஆம் தேதி பல்லக் காபாளையம் பகுதியில் நடக்க வுள்ள அரசு விழாவில் 45 நபர்க ளுக்கு முதற்கட்டமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். அத னால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுகிறது, என்றார். இதை யடுத்து போராட்டத்தில் ஈடுபட்டி ருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.