tamilnadu

img

அதனாலென்ன.. இந்து ராஜ்யம் அமைச்சிட்டா போச்சு..

ரயில் கட்டணத்தில்  

முதியோர்களுக்கான  

சலுகையை வெட்டியாச்சு..

இப்போ லக்கேஜ்

கொண்டு செல்லவும்

தண்டம் அழணும் னு

முடிவு எடுத்தாச்சு..

வருங்கால வைப்பு நிதி

வட்டியை 8.1% ஆகவும்

வெட்டி சுருக்கியாச்சு...

பெட்ரோல் டீசல் வரியை

கூட்டி 28 லட்சம் கோடி

மக்கள் சேமிப்பை

சூறையாடியாச்சு..

40% மக்களுக்கு

வேலை வாய்ப்பு போயாச்சு..

விலைவாசியும் கூட

தாறுமாறா அதிகமாச்சு..

அதனாலென்ன..

மசூதிக்குள்ள

லிங்கத்தை தேடிட்டு,

ஆமைக்கதையை பேசிட்டு,

அம்பானியும் அதானியும்

உலக பணக்காரங்களா

மாறிட்டாங்கனு வரும் நியூசை

பெருமையா படிச்சுட்டு

இந்து ராஜ்யம் அமைச்சிட்டா போச்சு..

-ஆர். பத்ரி