tamilnadu

img

டெண்டர் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை:
கிராமப்புறங்களில் இணையதள சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க வழங்கப்பட்ட டெண்டர்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக திமுக தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புதுறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் இணையதள சேவை வழங்க பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,950 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது.இந்த டெண்டரில் கலந்து கொண்ட பெரும்பாலான நிறுவனங்களை வைத்து விட்டு, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள் ளது. இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட வேண்டும்.முதல்வர் பழனிசாமி மற்றும் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோரின் விருப்பத்திற்கு இணங்க டெண்டர் ஒதுக்கும்படி தகவல் தொழில்நுட்ப துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு மற்றும் டான்ஃபினெட் நிர்வாக இயக்குனர் எம்.எஸ்.சண்முகம் ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக இருப்பதால் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பார வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வழக்கு தொடர்பாக வரும் 18 ம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.

;