tamilnadu

img

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை:
வருமானம் வந்தால் சரி என நினைத்து மதுபானக் கடைகளை திறப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால், தமிழகத்தில் உள்ள 5,330 டாஸ்மாக் மதுக்கடைகளும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம்  தேதி இரவுடன் மூடப்பட்டன.மாவட்டங்களில் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 
தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியதில் அரசு மதுபான கடைகளுக்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிடக் கூடாது”  என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:வாடிக்கையாளர்கள் நிற்க சாமியானா பந்தல் அமைக்க வேண்டும், அறிவிப்புகளை வெளியிட மைக் செட் பொறுத்த வேண்டும். மதுக்கடையின் கிரில் பகுதிக்கு வெளியே கவுண்ட்டர் தவிர்த்து பிற பகுதிகளில் நெகிழியால் தடுப்பு அமைக்க வேண்டும்.வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன் கள் மட்டுமே வழங்க வேண்டும்.கடையில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் வேண்டும். கடைக்கு வெளியே குறைந்தது 3 அடி இடைவெளிவிட்டு 50 வட்டங்கள் போட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;