tamilnadu

img

முதியோர் ஓய்வூதியம் ரூ.1200 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில், முதியோர் ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரித்துள்ளார்.

சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில், முதியோர் ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,500-ஆகவும், கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.