tamilnadu

img

தமிழக பாடத்திட்டங்கள் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளன - செங்கோட்டையன்

தமிழக பாடத்திட்டங்கள் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-  
தமிழக பாடத்திட்டங்கள் குழு அறிக்கையின் அடிப்படையில் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவிகித கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம். சனிக்கிழமைகளில் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.
கொரோனா ஊரடங்குக்கு  பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும். சிறப்பாசிரியர்களாக சேர்ந்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை”  என்றார்.