தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக்(டிஎன்பிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டிற்கான 6ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போட்டி ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி ஜூலை 30 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்காக கோயம்புத்தூர், எஸ்என்ஆர் கல்லூரி மைதானம் மற்றும் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானம், நத்தம் என்பிஆர் கல்லூரி மற்றும் ஐசிஎல் - சங்கர் நகர் மைதானம், திருநெல்வேலி ஆகிய மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியுடன் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மோத உள்ளது.
மேலும் 28 லீக் ஆட்டங்கள், பிளேஆப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என மொத்தம் 32 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
பிளேஆப் போட்டிகள் சேலம் மற்றும் கோவையில் நடக்கின்றன. இறுதியாக கோவையில் நடத்தப்பட்டு முடிவடைகிறது.