tamilnadu

img

தமிழகத்தில் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் இன்று காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. 
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் இணையதளத்தில் வெளியானது. இதில் தேர்வு எழுதியவர்களில் 92.3 சதவிகதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவியர் 94.80 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் 89.41 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 5.39 சதவிகிதம் பேர் அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர். 
இதில் மாவட்ட அளவில் 97.12 சதவிகிதம் தேர்ச்சி பெற்று  திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இதையடுத்து 96.99 சதவிகிதம் தேர்ச்சி பெற்று ஈரோடு இரண்டாவது இடத்திலும், 96.39 சதவிகிதம் தேர்ச்சி பெற்று கோவை 3வது இடத்திலும் உள்ளது.
 தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresult.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 
இந்நிலையில் 12ம் வகுப்பு தேர்வில் விடுபட்ட மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி மறு தேர்வுநடைபெறும். ஹால்டிக்கெட் பெறுவதற்கு நாளை கடைசி நாள் என்ற சூழலில் தற்போது வரை 250 பேர் மட்டுமே ஹால்டிக்கெட் பெற்றுள்ளனர். 
இதில் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுத வில்லை என அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில் சுமார் 700 பேர் மட்டுமே மறு தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருந்தனர்.