தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் வியாழனன்று (ஏப்.11) விருகம்பாக்கம் பகுதி 127வது வட்டத்தில் வாக்கு சேகரித்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா எம்எல்ஏ, பகுதிச் செயலாளர்கள் மு.ராசா, கண்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் இ.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.