ரஷ்யாவில் மருத்துவ படிப்புக்கு சென்ற தமிழக மாணவன் கைது!
கடலூர், ஜுலை 21- கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சரவணன் என்ற ஓட்டுநர் மகன் கிஷோர் (22), ரஷ்யாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்காக சென்றார். அங்கு தமிழ்நாட்டை சேர்ந்த நித்தீஷ் மற்றும் 3 ரஷ்ய மாணவர்களுடன் ஒரே அறையில் தங்கி படித்து வந்துள்ளார். ரஷ்யா மாணவர்கள், உணவு டெலிவரி நிறுவனத் தில் பகுதி நேர வேலை பார்த்து வந்தனர். அப்போது வாடிக்கையாளர்களிடம் பொருட்கள் விநியோகம் செய்த போது, பார்ச லில் போதைப்பொருள் இருந்ததாக கூறி 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுடன் தங்கி யிருந்த கிஷோர் மற்றும் நித்திஸ் என்ற மாண வரையும் கைது செய்தனர். இதில் ரஷ்யா மாணவர்களை விடுதலை செய்த நிலையில், கிஷோரை விடுவிக்கவில்லை. பெற்றோர் எவ்வளவோ முயற்சி செய்தும், கிஷோரை காப்பாற்ற, மீட்க முடியவில்லை. கிஷோர், நித்திஸ் ஆகிய 2 பேர் மீதும் குற்றம் சாட்டி இருவரையும் சிறையில் அடைத்த னர். இந்த நிலையில் கிஷோர் பேசிய ஆடியோ ஒன்றை பெற்றோருக்கு அனுப்பி வைத்துள் ளார். அதில், உக்ரைன் நாட்டிற்கு எதிரான போருக்கு செல்ல போலீசார் தன்னை மிரட்டி வருகின்றனர். இதற்காக ரஷ்யாவில் போர்க்களத்திற்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்கிறார்கள். மேலும் ஆவணம் ஒன்றிலும் மிரட்டி கையெழுத்து பெற்றுள் ளனர். ரஷ்யா அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் பயிற்சி முடித்ததும், போர்க்க ளத்திற்கு அனுப்பி விடுவார்கள் என்ற தகவல் அந்த ஆடியோவில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்நத கிஷோரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திங்கள் கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு கிஷோர் புகைப்படங்களுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் மகனை காப்பாற்றி, சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் கோரிக்கை கள் தொடர்பாக தமிழக அரசு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினார்கள் இதனை தொடர்ந்து போலீ சார் குறைந்த நபர்களை ஆட்சியர் அலு வலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்து தீர்வு காண வேண்டும் என தெரிவித்து அனுப்பி வைத்ததை தொடர்ந்து கிஷோர் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். தங்கள் மகனை எப்படியாவது உயிருடன் மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தனர். மாவட்ட ஆட்சியர் மாநில அரசுக்கு இது குறித்த தகவலை தெரி விப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே ரஷ்யாவிலிருந்து கிஷோர் தனது பெற்றோருக்கு அனுப்பிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.